மாணவி ராஜேஸ்வரிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


மாணவி ராஜேஸ்வரிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x

மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜே.இ.இ. நுழைவு தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, ஐ.ஐ.டியில்-ல் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக கட்சியே ஏற்கும்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story