ஆட்சியை காப்பாற்றித் தந்த எங்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன்


ஆட்சியை காப்பாற்றித் தந்த எங்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி:  டிடிவி தினகரன்
x

தற்போது இருப்பது உண்மையான அதிமுக இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்

சென்னை,

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

தே.ஜ கூட்டணியில் அமிஷா எடுக்கும் முடிவே, இறுதி முடிவாக இருந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அண்ணாமலை முயற்சியினால் தான் தே.ஜ கூட்டணியில் சேர்ந்தோம்.

எங்களுக்கு எதிராக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமியால் எங்களை சந்திக்க தைரியம் இருக்காது. ஆட்சியை காப்பாற்றித் தந்த எங்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தே.ஜ கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை.மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை அழைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற செய்ய முடியாது. யாரும் எதிர்பார்க்காத கூட்டணியை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைக்கும். அந்த கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்.

தற்போது இருப்பது உண்மையான அதிமுக இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டு செல்ல அமமுக முயற்சி செய்யும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

1 More update

Next Story