சனாதன சங்கிலிகளை நொறுக்கும் ஆயுதம் கல்வி - கமல்ஹாசன்

சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான். என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது: -
கல்வியும், அன்பும் ஒருங்கே கிடைப்பதில்லை. அம்மாவிடம் கிடைக்கும். அகரத்தில் கிடைக்கும். அது பெரிய விஷயம். சினிமா வானில் நட்சத்திரமாக இருப்பதற்கு கொடுக்கப்படும் கிரீடம் வேறு. ஆனால், சமூக வானில் இது போன்ற நற்பணிகள் செய்பவர்களுக்கு முள்கிரீடம் தான் கிடைக்கும்.
பரவாயில்லை அந்த கிரீடம் போதும் எனக்கு என சொல்வதற்கு மனோ பலம் தேவை. தைரியம் தேவை. ஏனென்றால் உடன் யாரும் நிற்கமாட்டார்கள். சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான்; இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்" என்றார்.
Related Tags :
Next Story






