கல்வியாளர் வசந்தி தேவி மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்


கல்வியாளர் வசந்தி தேவி மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
x

வசந்தி தேவி அம்மையார் சென்னையில் இன்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், புகழ்பெற்ற கல்வியாளருமான வசந்தி தேவி அம்மையார் சென்னையில் இன்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டில் கல்விச் சீர்திருத்தம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்காக போராடியவர்களில் வசந்தி தேவி அம்மையார் குறிப்பிடத்தக்கவர் ஆவார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி சார்ந்த கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்றவர்.

முனைவர் வசந்தி தேவி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story