நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு

கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக அதிகரித்து உள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.85 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com