கொடைக்கானலில் ஆன்லைன் மூலம் நுழைவு கட்டணம் - வனத்துறை புதிய அறிவிப்பு


கொடைக்கானலில் ஆன்லைன் மூலம் நுழைவு கட்டணம் - வனத்துறை புதிய அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2026 11:56 PM IST (Updated: 11 Jan 2026 11:57 PM IST)
t-max-icont-min-icon

நுழைவு கட்டணம் செலுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வனத்துறை வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளமான நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களையும் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில் பில்லர் ராக், பைன் பாரஸ்ட், குணா குகை, போயர் பாய்ண்ட் மற்றும் பேரிஜம் ஏரி ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கான நுழைவு கட்டணம் செலுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வனத்துறை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், பணமாக செலுத்த இயலாது எனவும் மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story