ஈரோடு - செங்கோட்டை ரெயில் சேவை பகுதியளவு ரத்து

செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரெயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக ரெயில் சேவைகளின் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16845) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயிவே தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ரெயில் திண்டுக்கல்- செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 27 முதல் 30 வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் எனவும் இந்த ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
செங்கோட்டையில் இருந்து காலை 5.10-க்கு ஈரோடு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16846) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயிவே தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ரெயில் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ஆகஸ்ட் 28 முதல் 31 வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் எனவும் இந்த ரெயில் காலை 11.25 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.






