டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தப்பிக்க கீழே குதித்த 3 பேர் பலி


7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து மூவரும் கீழே குதித்தனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக 7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்தனர். கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story