தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் தீவிபத்து


தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் தீவிபத்து
x

தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து புகை வருவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தட்டப்பாறை விலக்கு, செந்திலாம் பண்ணையில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து புகை வருவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கன்டெய்னரை திறந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட அலுவலர் கணேசன் அறிவுரையின்படி கன்டெய்னரில் இருந்த பஞ்சு பேல்கள் வெளியே எடுக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதனால் தீ மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story