ஏற்காடு மலைப்பகுதியில் நிலவிய மூடுபனி - வாகன ஓட்டிகள் அவதி


ஏற்காடு மலைப்பகுதியில் நிலவிய மூடுபனி - வாகன ஓட்டிகள் அவதி
x

பனி மூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏற்காட்டில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சேலம்,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சமீபத்தில் டிட்வா புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தற்போது மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஏற்காடு மலைப்பகுதியில், கடும் மூடுபனி நிலவியது. இதனால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மேலும் காலை முதலே பனி மூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், ஏற்காட்டில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

1 More update

Next Story