இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்
வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11 வயது), டிக்சிதா (9 வயது), டில்சிதா (7 வயது) என 3 மகள்கள் உண்டு.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி காலையில் வனிதா மகள்களுடன் வீட்டில் சமைத்த வேர்க்கடலை சட்னியுடன், இட்லி சாப்பிட்டுள்ளார். அன்றிரவு வனிதா மற்றும் 3 மகள்களுக்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மறுநாள் 24-ந்தேதி பிரம்மதேசம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
பின்னர் அன்று மாலையில் பிரனிதா, டிக்சிதா இருவரும் மயக்கம் அடைந்ததால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். தொடர்ந்து 26-ந்தேதி பிரனிதாவை மட்டும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






