சிறுமி பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவன் போக்சோவில் கைது


சிறுமி பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவன் போக்சோவில் கைது
x

கோப்புப்படம் 

சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கள்ளிக்குடி ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story