சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவரது மனைவி சுகன்யா (32). இவர் சம்பவத்தன்று வேலாயுதம்பாளையம்-புன்னம்சத்திரம் சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com