ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு

சில அடி தூரம் பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் புதையல் ஒன்று இருந்ததை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோவிலூர் சிவன் கோவில் உள்ளது. 3-ம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோவிலில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று பள்ளம் தோண்டப்பட்டது.
சில அடி தூரம் பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் புதையல் ஒன்று இருந்ததை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த புதையலை மீட்டு பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் அதில் இருந்ததுள்ளது. இதையடுத்து கோவில் கருவறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கக்காசு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகளை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






