கிருஷ்ணகிரியில் இன்று முக.ஸ்டாலின் பங்கேற்க இருந்த அரசு விழா ஒத்திவைப்பு

விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று, இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80), நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






