தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
திருச்சி,
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார் .அவர் கூறியதாவது,
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும்.இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Related Tags :
Next Story






