கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்


கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்
x

கடலூர் அருகே இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்தனர்.

கடலூர்

கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் முப்பது பயணிகள் காயமடைந்தனர்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்னையில் இருந்து நாகை நோக்கி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து,அரசு பேருந்தின் மீது மோதியது.

தனியார் பேருந்து இடது பக்கம் திரும்ப முயன்றபோது அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து சாலையில் இருந்து வயல்வெளியில் இறங்கியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த 30 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story