உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது - ஐகோர்ட் மதுரை கிளை

உள்நோக்கமின்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமாகாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கூறியுள்ளது.
உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது - ஐகோர்ட் மதுரை கிளை
Published on

மதுரை, 

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், கடந்த 2015ல் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட திருமணமாகாத மனநலம் பாதித்த ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக, பெண்ணின் தாய் சோழவந்தான் போலீசில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு முருகேசன் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், 2018-ஆம் ஆண்டு அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி முருகேசன், மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, ஒரு ஆண், பெண்ணின் கையை பிடித்து இழுப்பது, அவளது கண்ணியத்தை பாதிக்கும் செயல். ஆனால் உள்நோக்கம் இன்றி நடந்தால், அது அவமதிப்பாகாது, குற்றம் ஆகாது என்றார்.

பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்ததாக ஆதாரம் இல்லை. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு வழங்கி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. எனக் கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com