மானிய கோரிக்கை: துறை சார்ந்த அதிகாரிகள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும்- சபாநாயகர் அப்பாவு

துறை சார்ந்த அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு உடனடியாக வர வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை
சட்டப்பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பேரவையை அதிகாரிகள் மதிக்க வேண்டும் எனவும், இது குறித்து தான் ஒரு முறை எச்சரித்திருப்பதாகவும், எந்த மானிய கோரிக்கை, தீர்மானம் வருகிறதோ அந்த துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
அதிகாரிகள் சட்டப்பேரவையில் இருப்பது குறித்து தான் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாகவும், இந்த சமய அறநிலையத்துறை அதிகாரிகள், செய்தித் துறை அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் வரலாம். எனவே உடனடியாக அதிகாரிகள் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






