மழையால் விளைச்சல் பாதிப்பு: காய்கறி விலை கிடுகிடு உயர்வு


மழையால் விளைச்சல் பாதிப்பு: காய்கறி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 28 Nov 2025 5:05 AM IST (Updated: 28 Nov 2025 5:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழை இல்லாத நேரத்தில் மேகமூட்டமும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நெல்லையில் வெள்ளை கத்தரிக்காய் விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டி இருந்தது. இந்த நிலையில் நேற்று சில்லறை கடைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் விலை ரூ.85 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகளிடம் வெள்ளை கத்தரிக்காய் இல்லை. பச்சை நிற கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. அது ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது.

இதுதவிர சில்லறை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70, வெண்டைக்காய் ரூ.50, அவரை ரூ.100, சீனிஅவரை ரூ.50, பாகற்காய் ரூ.100, முருங்கைக்காய் ரூ.300, பல்லாரி ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.70, இஞ்சி ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.35, கேரட் ரூ.50, சவ்சவ் ரூ.30, முட்டைகோஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.45 என விற்பனை ஆனது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்துள்ளது. ஒருசில காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அவற்றின் மீது லாரி வாடகை சேர்க்கும்போது விலை உயர்ந்து விடுகிறது. வருகிற பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும்" என்றனர்.

1 More update

Next Story