கோவையில் ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


கோவையில் ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2025 3:23 PM IST (Updated: 21 March 2025 4:34 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே பாலக்காடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கோயம்புத்தூர்

கோவை அருகே பாலக்காடு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து எர்ணாகுளம் சென்ற பேருந்தில் சோதனை செய்தனர், அதிலிருந்த சில பண்டல்களை பிரித்து பார்த்தனர்.

அந்த பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர். இதனையடுத்து பண்டலை எடுத்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவப்பிரகாஷிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அவரிடம் எந்த ஒரு உரிய ஆவணமும் இல்லாததால் பண்டலில் இருந்த ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார், சிவப்பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story