வழக்கிலிருந்து பிணையில் விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டு வாங்கிய தலைமைக்காவலர் கைது


வழக்கிலிருந்து பிணையில் விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டு வாங்கிய தலைமைக்காவலர் கைது
x

கோப்புப்படம்

லஞ்ச பணத்தை தலைமைக்காவலர் பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அனுமந்தபுரம் அஞ்சல் காரிமங்கலம் தாலுக்கா மதனேரிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்திகுமார் வசித்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக உள்ளார்.

பாலக்கோடு காவல்நிலைய தலைமைக்காவலரான சுரேஷ் வழக்கிலிருந்து பிணையில் அனுப்ப தனக்கு ரூ.15,000 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். பின் லஞ்ச பணத்தை ரூ.10,000 ஆக குறைத்து தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பிரிவில் அளித்த புகாரின் பேரில் இன்று பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி பொறிவைப்பு நடவடிக்கையின் போது சுரேஷ் தலைமைக்காவலர் லஞ்ச பணம் ரூ.10,000/-யை புகார்தாரரிடமிருந்து பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

1 More update

Next Story