ஊட்டியில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் அவதி

பலத்த காற்றினால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூர், பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. குறிப்பாக ஊட்டியில் சூறைக்காற்றுடன், மிதமான மழையும் பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்ததுடன், கடும் பனிமூட்டமும் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். நீலகிரி அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் பலத்த காற்றினால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களான தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் மரக்காடுகள், எட்டாவது மைல், டிரீ பார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
Related Tags :
Next Story






