முதல்-அமைச்சரின் உடல்நிலை - அப்போலோ மருத்துவமனை அறிக்கை


முதல்-அமைச்சரின் உடல்நிலை - அப்போலோ மருத்துவமனை அறிக்கை
x
தினத்தந்தி 21 July 2025 9:23 PM IST (Updated: 21 July 2025 9:29 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் இருந்தவாரே உத்தியோகபூர்வ கடமைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில், இது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. டாக்டர்கள் அளித்த பரிந்துரைப்படி சில பரிசோதனைகள் மெற்கொள்ளப்பட உள்ளது. மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகபூர்வ கடமைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.



1 More update

Next Story