ஓசூர்: 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் பலி


ஓசூர்:  4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் பலி
x
தினத்தந்தி 12 Oct 2025 6:31 AM IST (Updated: 12 Oct 2025 6:38 AM IST)
t-max-icont-min-icon

வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கி கொண்டது.

ஓசூர்,

ஓசூரில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் பலியானார்கள். ஓசூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது, பிக்கப் வேன் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தின்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று அதன் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது.

அப்போது, சரக்கு லாரி ஒன்று வந்துள்ளது. அது ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில், வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கி கொண்டது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். மற்ற நபர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story