ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு? நிதி அமைச்சகம் தகவல்

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
புதுடெல்லி,
இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியன்று, முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இவ்வருடம் ஜிஎஸ்டி அறிமுகமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவில் ரூ. 2.37 லட்சம் கோடியாக பதிவானது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ. 1.74 லட்சம் கோடிக்கு ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் அதிகம் ஆகும். ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.






