காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்... பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு


காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்... பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Nov 2025 5:44 PM IST (Updated: 16 Nov 2025 5:45 PM IST)
t-max-icont-min-icon

காரை பார்க்கிங் செய்வதற்காக மனைவியை காரின் பின்னால் நின்று பார்க்க சொல்லிவிட்டு ரிவர்ஸ் எடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோணாம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற ராஜா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ராஜா நேற்று காலை குடும்பத்தினருடன் காரில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் அருகே காரை பார்க்கிங் செய்வதற்காக மனைவியை காரின் பின்னால் நின்று பார்க்க சொல்லிவிட்டு ரிவர்ஸ் எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக காருக்கும், சுவற்றிற்கும் நடுவில் சிக்கி உடல் நசுங்கி இந்துமதி படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இந்துமதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story