சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்: செங்கோட்டையன்


சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்: செங்கோட்டையன்
x

மக்கள் சக்தியால் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்று செங்கோட்டையன் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்சொங்கோட்டில் மிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-

அதிமுக, திமுகவில் இருந்தும் நமது கட்சிக்கு (தவெக) வந்து இணைய இருக்கிறார்கள். தேர்தல் களம் என்பது எப்படி இருக்கும் என யாராலும் யூகிக்க முடியாது; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது. போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது.

சேர வேண்டிய இடத்தில் நான் சேர்ந்திருக்கிறேன். மக்கள் சக்தியால் விஜய் முதல்-அமைச்சர் ஆவார். தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு விஜய்யை விட்டால் யாருமில்லை. இளைஞர்களைத் தட்டியெழுப்பும் ஆற்றம் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் இன்றைக்கு விஜய்யை விட்டால் யாரும் இல்லை.

2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்-அமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம். தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஏற்றுக்கொள்பவர்களால் மட்டும்தான் கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சியப் பயணம். வெற்றி வாகை சூட தயாராக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story