‘பராசக்தி படத்தை இன்னும் பார்க்கவில்லை’ - கனிமொழி எம்.பி.

கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படமும் சென்சார் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ‘பராசக்தி’ படக்குழுவினர் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“நமது பொங்கல் பண்டிகையைப் பற்றி நாம் பேசுவோம். தேர்தலுக்கு தேர்தல் பொங்கல் நினைவு வரக்கூடியவர்கள், தமிழர்களைப் பற்றி தேர்தல் சமயத்தில் அக்கறை படக்கூடியவர்கள், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கை நினைப்பவர்களைப் பற்றி பேசி பயனில்லை. அவர்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாற தயாராக இல்லை.
பராசக்தி திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. முதலில் எடுக்கப்பட்ட கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படமே அந்த சமயத்தில் சென்சார் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
தொடர்ந்து தணிக்கை வாரியம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மக்களுக்கு எதிராகவும், ஆளுங்கட்சியின் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை எதிர்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






