இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
x
தினத்தந்தி 6 Sept 2025 9:31 AM IST (Updated: 7 Sept 2025 8:59 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 6 Sept 2025 10:00 AM IST

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சட்டம், ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  • 6 Sept 2025 9:42 AM IST

    தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். தமிழகத்தில் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த 26 நிறுவனங்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

    ஜெர்மனியை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர் மட்ட கூட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.

    இந்த ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில், தமிழகம் முன்னேறி செல்கிறது, முதலீடுகள் பொழிகின்றன என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், லண்டனில் இருந்து மகிழ்ச்சியான செய்தி. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகன சூழலுக்கான மின்கலம் சேமிப்பு சாதனங்களுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    ஆஸ்டிராஜெனீகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் இதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றால், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான தமிழக எழுச்சி பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இதனால் நம்முடைய இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    இவை வெறும் எண்கள் அல்ல. அவை வாய்ப்புகள், வருங்காலங்கள் மற்றும் கனவுகள். இது, செயலில் திராவிட மாடலின் மனவுறுதியாகும் என பதிவிட்டு உள்ளார்.

  • 6 Sept 2025 9:39 AM IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். ஓகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் 8வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • 6 Sept 2025 9:36 AM IST

    ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு

    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமநாதபுரம் வரை ஹூப்ளி ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • 6 Sept 2025 9:34 AM IST

    சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

    சென்னை, சென்னையில் 06.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 More update

Next Story