மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நேற்று மதியம் முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து வினாடிக்கு 2,432 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று நிலவரப்படி அணை நீர்மட்டம் 115.77 அடியாக இருந்தது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com