மண்டலங்கள் உயர்வு; எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் - சென்னை மாநகராட்சி தகவல்


மண்டலங்கள் உயர்வு; எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் - சென்னை மாநகராட்சி தகவல்
x

மண்டலங்கள் உயர்த்தப்பட்டது குறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து, மண்டலங்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 20 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மண்டலங்களின் மாற்றங்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மண்டலக் குழு தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் ஆகிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story