இண்டிகோ விமான சேவை பாதிப்பு: பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை

இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை
Published on

விமானிகள், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவையில் நேற்று ஒரேநாளில் 1000 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து 400 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ. 57 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ.18,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ. 26,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com