இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்: குளத்தில் குதித்த காதலர்கள் - வாலிபர் உயிரிழப்பு


இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்: குளத்தில் குதித்த காதலர்கள் - வாலிபர் உயிரிழப்பு
x

திருவாரூர் அருகே காதலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (23 வயது). பிபிஏ படித்துள்ளார். இவரும் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ (19 வயது) என்ற கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நம்முடைய காதலை தொடர வேண்டாம் என்று ஜெயஸ்ரீ கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பிரவீன் நேரில் பேசி முடிவு செய்யலாம் என அழைத்துள்ளார். இதையடுத்து நேற்று பிரவீன் குமார் கும்பகோணம் சென்று, ஜெயஸ்ரீயை பைக்கில் திருவாரூர் அழைத்து வந்தார்.

வழியில் திருக்கண்ணமங்கை பகுதிக்கு வந்த இருவரும் அங்கிருந்த சேட்டாக்குளம் அருகே அமர்ந்து பேசினர். அப்போது காதலை முறித்துக்கொள்வதில் ஜெயஸ்ரீ பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால், ஏமாற்றமடைந்த பிரவீன் திடீரென குளத்தில் குதித்தார். இதை எதிர்பார்க்காத ஜெயஸ்ரீயும் குளத்தில் குதித்து பிரவீன் குமாரை காப்பாற்ற முயன்றார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story