சென்னை அருகே ரூ.301 கோடியில் சர்வதேச விளையாட்டு நகரம்

விளையாட்டு நகரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணையை வெளியிட்டது.
சென்னை அருகே ரூ.301 கோடியில் சர்வதேச விளையாட்டு நகரம்
Published on

சென்னை,

சென்னை அருகே செம்மஞ்சேரியில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் விளையாட்டு நகரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணையை வெளியிட்டது.

இதன்படி செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் விளையாட்டுகள், கால்பந்து மைதானம், ரோலர் ஸ்கேட்டிங், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, சைக்கிளிங், தடகளத்துக்கான ஓடுதளம், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com