நீட் வினாத்தாள் ரூ.40 லட்சமா? - ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்க முயற்சி

ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
ஜெய்ப்பூர்,
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாளைக் கொடுப்பதாகக் கூறி 3 பேர் கொண்ட கும்பல் மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதவுள்ள மாணவனின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு நீட் வினாத்தாளுக்காக ஹரியாணா மாநிலம் குருகிராம் அழைத்துள்ளனர். ஆனால், வினாத்தாளின் நகலைக் காட்டுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அப்போது அதற்காக ரூ. 40 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நீட் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் பல்வான் (27), முகேஷ் மீனா (40), ஹர்தாஸ் (38) ஆகிய மூவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story






