செங்கோட்டையனுடன் மனக்கசப்பா? ஆனந்த் பதில்

தவெக தலைவர் விஜய்யின் கீழ் அனைவரும் தொண்டர்கள்தான் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னை,
பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து 392 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
விழாவில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதாவது:-
நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எங்களிடம் சின்னச்சின்ன சண்டைகள் கூட இல்லை. செங்கோட்டையனுடன் எந்த மனக்கசப்பும் இல்லை.கே.ஏ.செங்கோட்டையனுடன் மனக்கசப்பு என்பதெல்லாம் கிடையாது. எங்களை பொறுத்தவரை விஜய்யின் கீழ் அனைவருமே தொண்டர்கள்தான். 50 ஆண்டு அரசியலில் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் செங்கோட்டையன் என்றார்.
Related Tags :
Next Story






