களப்பணியில் திமுக தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம்: மு.க.ஸ்டாலின்

களப்பணியில் திமுக தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், இந்த கூட்டம் தொடர்பாக திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
களப்பணியில் திமுக தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது...இன்று நாம் வகுத்த திட்டத்தையும், நிர்ணயித்துள்ள இலக்கையும், எனது செய்தியையும் தமிழ்நாடெங்கும் உள்ள நமது கட்சியினரிடம் சென்று சொல்லுங்கள்.
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என நம் ஒவ்வொருவரின் வாக்குச்சாவடியிலும் வெல்வோம்! ஏழாவது முறை வாகை சூடி வரலாறு படைப்போம். என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






