ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு... அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்


ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு... அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
x
தினத்தந்தி 3 Jun 2025 12:32 PM IST (Updated: 22 Jun 2025 5:05 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் நிலையில், இந்த மாதம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

சென்னை,

2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது. தவெக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக 234 தொகுதிகளிலும் தற்போது பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு 70 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், ஜனநாயகன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அரசியல் பணியை தவெக தலைவர் விஜய் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விரைவில் மாவட்டச் செயலாளர்களை தனி தனியாக சந்திக்க உள்ளார். மாவட்ட அளவில் கட்சியின் நிலை, ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிய திட்டமிட்டுள்ளார். கட்சியின் கட்டமைப்பு குறித்து முழுமையான ஆய்வு கூட்டங்களை வரும் 2 வாரங்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகிறார்.

அடுத்த மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் நிலையில், இந்த மாதம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டம். பூத் கமிட்டி நிர்வாகிகள் குறித்து ஆய்வு பணிகள், புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார் விஜய். மீண்டும் ஒரு பூத் கமிட்டி கூட்டம் நடத்தி நிர்வாகிகளிடம் அப்டேட்களை கேட்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

1 More update

Next Story