ஜெருசலேம் புனித பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல்

ஜெருலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரமும் 'இ.சி.எஸ்.' முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 1-ந்தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வரை அனுப்பி வைக்கலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com