கன்னியாகுமரி: மாத்தூர் தொட்டி பாலம் சீரமைப்பு பணி நவம்பர் முதல் வாரம் தொடங்கும்- கலெக்டர் தகவல்

கன்னியாகுமரியில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், அதன் கைப்பிடி மற்றும் மேல் தட்டு பகுதிகள் சேதமடைந்துள்ளன.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், அதன் கைப்பிடி மற்றும் மேல் தட்டு பகுதிகளில் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து அரசு ஆணைப்படி ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கைப்பிடி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் இந்த பணிகள் தொடங்கும் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






