கரூர் கூட்ட நெரிசல்: நயினார் நாகேந்திரன் இரங்கல்


கரூர் கூட்ட நெரிசல்: நயினார் நாகேந்திரன் இரங்கல்
x
தினத்தந்தி 27 Sept 2025 11:23 PM IST (Updated: 27 Sept 2025 11:45 PM IST)
t-max-icont-min-icon

பாஜக-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

பாஜக-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன். கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவரையும் உடனடியாக தேவையான உதவிகளை செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story