மாணவர்களுக்கு மடிக்கணினி; 5 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும் - செங்கோட்டையன் கருத்து

மடிக்கணினிகளை என்றைக்கு கொடுத்திருக்க வேண்டுமோ, அப்போதே கொடுத்திருக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை,
பத்து லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் 5-ந்தேதி(நேற்று) தொடக்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“5 ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்த மாணவர்களின் நிலை என்ன என்பதை கல்வியாளர்கள் அனைவரும் அறிவார்கள்.
இப்போது கொடுப்பதை விட என்றைக்கு கொடுத்திருக்க வேண்டுமோ, அப்போதே கொடுத்திருக்க வேண்டும். குழந்தை வளரும்போது பாலூட்ட வேண்டுமே தவிர, வளர்ந்து முடித்த பிறகு பாலூட்ட வேண்டிய தேவை இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






