கோவை: பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

கோவையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது.
கோவை,
கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்குமுன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், சிறுத்தை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அதை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், பூச்சியூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சிறுத்தை பதுங்கி இருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஆனாலும், சிறுத்தை தொடர்ந்து தப்பியோட முயற்சித்தது. அப்போது, வனத்துறையினர் சிறுத்தையை வலைவீசி பிடித்தனர். சிறுத்தையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






