ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 Aug 2025 7:56 AM IST (Updated: 15 Aug 2025 10:55 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற, வேற்றுமையே நமது பெரும் வலிமையெனக் கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை இந்நாளில் நாம் மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்!

உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பது! ஒவ்வொரு மனிதரும் சமத்துவத்தோடும், மாண்போடும், மரியாதையோடும் வாழ முடிகிற வகையில், நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதுதான் உண்மையான விடுதலையாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story