தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று மாலை தொடங்க உள்ளது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா! புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்.
#ஓரணியில்_தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என அதில் பதிவிட்டுள்ளார்.






