தூத்துக்குடியில் ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! விழிப்புணர்வு கருத்தரங்கம்
Published on

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரியில் நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட எஸ்.பி. மாணவ மாணவிகளிடம் அனைவரும் பாகுபாடின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் இளைஞர்கள் போதைப் பொருளை தவிர்த்து எதிர்காலத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு குற்றவழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. ஜமால், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, கல்லூரி முதல்வர் பானுமதி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com