சிவகங்கையில் இன்றும், நாளையும் மதுக்கடைகள் மூடல்

இந்த தகவலை கலெக்டர் பொற்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
திருப்பத்தூரில் நாளை (வெள்ளிக்கிழமை) மருது சகோதரர்களின் 224-வது நினைவு தினம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மதியம் முதல் நாளை வரை திருப்பத்தூர் பகுதியில் இயங்கும் எப்.எல்.-2 கிளப், டாஸ்மாக் கடைகள் (மதுபானக்கடை எண்:7571 காரைக்குடி ரோடு, 7740 மின்நகர் சிவகங்கை ரோடு), திருக்கோஷ்டியூர் பகுதியில் இயங்கும் மதுபானக்கடை (மதுபானக்கடை எண்:7747- சோலுடையான்பட்டி, 7573- தென்மாபட்டு), மதகுபட்டி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் (7703- சிவப்பிரகாசம் நகர், மதகுபட்டி, 7705- ஒக்கூர்), சிவகங்கை பகுதியில் இயங்கும் எப்.எல்.-2 கிளப் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7552- திருவள்ளுவர் தெரு,
7556- பிள்ளைவயல் காளியம்மன் தெரு, 7414- ெரயில்வே நிலையம் சிவகங்கை, 7577- ராகினிபட்டி, 7514- அஜீஸ் தெரு), மானாமதுரை பகுதியில் இயங்கும் எப்.எல்.-2 கிளப், டாஸ்மாக் கடைகள் (மதுபானக்கடை எண்:7541 மானாமதுரை நகர், 7544- மானாமதுரை ெரயில்வே நிலையம், 7663- கீழமேல்குடி, 7669- முத்தனேந்தல், 7680- கஞ்சிமடை, 7706- வளநாடு விலக்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை), திருப்பாச்சேத்தி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை (மதுபானக்கடை எண்:7512- பழையனூர்), திருப்புவனம் பகுதியில் இயங்கி வரும் எப்.எல்.-2 கிளப், டாஸ்மாக் கடைகள் (மதுபானக்கடைகள் எண்: 7685- நெல்முடிகரை, 7682- புலியூர், 7547-வன்னிக்கோட்டை கிராமம், 7675- கலியாந்தூர்),
பூவந்தி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை (மதுபானக்கடைகள் எண்:7615- பூவந்தி மேலூர் ரோடு) ஆகிய டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.-2 கிளப் ஆகியவை முழுவதுமாக மூடப்படும். இந்த தகவலை கலெக்டர் பொற்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






