கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
Live Updates
- 27 July 2025 3:48 PM IST
திருச்சி விமான நிலையம் செல்கிறார் பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து ஹெலிபேட் உள்ள சோழகங்கத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கிறார்.ஹெலிகாப்டரில் திருச்சி புறப்படும் முன் பொதுமக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்து உற்சாகம். கங்கைகொண்ட சோழபுரத்தில் திட்டமிட்டதை விட கூடுதல் நேரம் செலவிட்டார் பிரதமர் மோடி.
- 27 July 2025 3:36 PM IST
சோழகங்கம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து ஹெலிபேட் உள்ள சோழகங்கம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி. சோழகங்கம் நோக்கி புறப்பட்ட பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி உற்சாகம் அடைந்தனர்.
- 27 July 2025 3:30 PM IST
தமிழகத்தில் ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழனுக்கு சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழர் ஆட்சி. தந்தை ராஜராஜன் மீது ராஜேந்திர சோழன் கொண்ட பக்தியே காரணம் . ராஜராஜனுக்கும், ராஜேந்திரனுக்கும் தமிழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று ராஜேந்திர சோழனினின் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார்.
- 27 July 2025 2:25 PM IST
இளையராஜா இசை மரியாதை - மெய்மறந்த பிரதமர்
இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மரியாதையை மெய்மறந்து கேட்டார் பிரதமர் மோடி.முப்பெரும் விழாவில், சோழருக்கு இசை மரியாதை செலுத்துகிறார் இளையராஜா.
- 27 July 2025 2:22 PM IST
இளையராஜாவின் இசையில் கரைந்துருகும் பார்வையாளர்கள்
இளையராஜா சிம்பொனி திருவாசகத்தை கேட்டு நெக்குருகி பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். சோழருக்கு இசை மரியாதை செலுத்தும் இசையமைப்பாளர் இளையராக நிகழ்ச்சி நடக்கிறது.
- 27 July 2025 2:05 PM IST
மெய்சிலிர்க்க வைத்த ஓம் சிவோஹம் பாடல்
சோழருக்கு இசை மரியாதை செலுத்தும் இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சி தொடங்கியது.முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஓம் சிவோஹம் என்ற பாடல் இசைக்கப்பட்டது. இசை நிகழ்ச்சியில் இளையராஜா இசைத்த ஓம் சிவோஹம் பாடலால் பார்வையாளர்களை மெய்சிலிர்த்தது.
- 27 July 2025 1:56 PM IST
ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை இரு கரம் கூப்பி பக்தியோடு பிரதமர் மோடி கேட்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
- 27 July 2025 1:50 PM IST
கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் ஆடி திருவாதிரை விழாவில் மோடி பங்கேற்றுள்ளார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. திருமாவளவன் பங்கேற்றுள்ளார். தொகுதி எம்.பி என்ற முறையில் பிரதமரின் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
- 27 July 2025 1:44 PM IST
சோழீசுவரருக்கு தீபாராதனை காட்டிய பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சோழீசுவரர், துர்கா, பார்வதி, முருகன் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
வாரணாசியில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து சோழீசுவரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்தார். அதன்பின்னர், சோழீசுவரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். சோழீசுவரர் கோவிலில் தமிழில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். முன்னதாக, பிரதமர் மோடிக்கு சோழிசுவரர் கோவில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

- 27 July 2025 1:44 PM IST
சோழர்களின் பெருமையை கேட்டறிந்த பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் மாளிகையில் உள்ள சிலைகள், சிற்ப வேலைபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெருமைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் போர் புரிந்த இடங்கள், அவர்களின் எல்லை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார். சோழர் கால செப்பேடுகள், உலோகத்தில் வடிக்கப்பட்ட சிலைகள், கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டு அவை குறித்து அறிந்துகொண்டார்.தொடர்ந்து, கோவிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்த்து வியந்தார்.















