மடப்புரம் இளைஞர் மரண விவகாரம் ; நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்


மடப்புரம்  இளைஞர்  மரண விவகாரம் ; நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
x

சென்னை: மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தவெக அறிவித்துள்ளது.

சென்னை,

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: , "சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து ஐகோர்ட்டே அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தவெக தலைவர் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 3.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story